கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டார்.

போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் தினசரி 700 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மாநகராட்சியால் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் வாடிக்கையாகவே உள்ளது. இதனிடையே, நேற்று மாலை 5 மணியளவில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அளித்த தகவலின் பேரில் பீளமேடு மற்றும் கோவை தெற்கு பகுதிகளில் இருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தன.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.