திருப்பூர் : அவிநாசி அருகே பேருந்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் : அவிநாசி அருகே பேருந்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த முத்துச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21) என்ற இளைஞர் அவிநாசியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் உதவி கணக்கராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் சில பேப்பர்களை நகலெடுத்து விட்டு மீண்டும் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இடதுபுறமாக அருண்குமார் சென்ற இருசக்கர வாகனத்தை உரசியதில், நிலை தடுமாறிய அருண்குமார் சரிந்து கீழே விழுந்த அவர் மீது அரசு பேருந்தின் பின்சக்கரம் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.