கோவை : காரமடை ரயில்வே மேம்பால சேவை சாலை அமைக்கப்படும் பணியினை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமை பொறியாளர் முருகேசன் ஆய்வு செய்த போது, தாமதமாக நடைபெறும் நில ஆர்ஜித பணிகளை விரைந்து மேற்கொண்டு பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ரயில்வே மேம்பாலம் இல்லாத காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு சுமார் 34 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. குறித்த காலத்திற்கு மேல் 2 ஆண்டுகள் கூடுதலாக எடுத்து கொண்டே இந்த பாலப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இருப்பினும், புறவழிச் சாலையான சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நில ஆர்ஜித பணிகள் நிறைவடையாததே காரணமாகும்.

எனவே, அதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமை பொறியாளர் முருகேசன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேம்பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அடியே உள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்த வேண்டிய இடங்களை ஆய்வு செய்த அவர், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் தற்போது முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரயில்வே பாதை அடியே சப்வே அமைக்கப்படுவது குறித்த திட்ட மதிப்பீடு செய்து அதனை செயல்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தமைமை பொறியாளர் முருகேசன், தாமதமாக நடைபெறும் இப்பணியினை நில ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக வருவாய்த்துறையிடம் பேசி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.