மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா கண்கவர் வானவேடிக்கையுடன் நிறைவு

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா கண்கவர் வான வேடிக்கையுடன் நிறைவுற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா கண்கவர் வான வேடிக்கையுடன் நிறைவுற்றது. 

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தளமான மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 30-ம் தேதி நடைபெற்ற நிலையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, சுற்றுவட்டார கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். 10 நாட்கள் நடைபெற்ற குண்டம் திருவிழா இன்று வான வேடிக்கையுடன் நிறைவுற்றது. 



நிறைவு விழாவையொட்டி, அம்மன் இன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வைபவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பகாசுரன் சிலை அருகே பிரம்மாண்ட வெடிகள் வெடித்ததுடன் வானத்தை வண்ணமயமாக மாற்றிய கண்கவர் வான வேடிக்கைகள் நடைபெற்றது. 



சுமார் அரை மணிநேரம் இடைவிடாது நடத்தப்பட்ட இந்த வேடிக்கை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வானத்தையே வண்ணமயமாக்கிய இந்த வெடி நிகழ்ச்சியினை கண்டு ரசித்தனர். வண்ணமயான வான வேடிக்கை மற்றும் வெடிசத்ததுடன் இந்தாண்டு குண்டம் திருவிழா நிகழ்ச்சி நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...