போதைப் பொருட்களில் இருந்து இளைஞர்களை மீட்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பிரத்யேக அலைபேசி எண் வெளியீடு

கோவை : இளம் சமுதாயத்தை கஞ்சா போன்ற போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பிரத்யேக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.


கோவை : இளம் சமுதாயத்தை கஞ்சா போன்ற போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பிரத்யேக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.



கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சமூக விரோத கும்பல் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் தீவிர முயற்சியில் மாநகரில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மாநகர காவல் துறை சார்பில் இளம் சமுதாயத்தை கஞ்சா போன்ற போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க பிரத்யேக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்கு வரும் தகவல்கள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பிரத்யேக எண்ணும்..! அதன் பயனும்..! :

கோவை மாநகரில் வசித்து வரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் காண மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தனிப்படைகளை அமைத்து, இளைஞர்களை போதை வஸ்துக்களில் இருந்து பாதுகாக்க "6384200100" என்ற பிரத்யேக எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிரத்யேக எண்ணானது கல்லூரி மாணவ, மாணவியர், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக எண்ணுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் தனது மகன்களின் போக்கில் சில சந்தேகம் உள்ளதை அறிந்து ரகசியமாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், குறிப்பிட்ட போதைவஸ்துக்கு அடிமையான மாணவர்களை கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள "டிரக் கன்ட்ரோல் கமிட்டி" மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு நல்வழிப்படுத்தபடுகின்றனர். அதைத் தொடர்ந்து, கமிட்டி மூலம் மாணவர்கள் ரகசியமாக கண்காணிக்கவும் படுகின்றனர்.

பிரத்யேக எண்ணுக்கு வந்த அழைப்பும்..! நடவடிக்கைகளும்..! :

கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் குறித்த தகவல் 'டிரக் கன்ட்ரோல் கமிட்டியின்' பிரத்யேக எண்ணுக்கு தகவலாக வந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் கந்தசாமி தலைமை காவலர்கள் கிரிஷ் குமார் மற்றும் மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் குற்றவாளியை பின் தொடர்ந்து கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளியை விசாரணை செய்ததில், அவர் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தாஸ் என்ற மரியசூசை என்பதும், அவருக்கு வால்பாறை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இப்படி இருக்க அவர் அப்பகுதியை விட்டு வெளியேறி தற்போது கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார்.



அதேபோல, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ஜோசப் ஜான் மற்றும் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கரின் மகன் பாரிஸ் ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவலாக தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளியை பின் தொடர்ந்த சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் மது விக்ரம், ரவி ஆகியோர் அடங்கிய காவலர் குழுவினர், அவர்களை கையும் களவுமாக பிடித்து அவர்களிடமிருந்த 1,300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.



மாநகர காவல் ஆணையர் பாராட்டு ;

டிரக் கன்ட்ரோல் கமிட்டியின் பிரத்யேக எண்ணுக்கு வந்த அழைப்பின் பேரில், கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளியை பின்தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கந்தசாமி, தலைமைக் காவலர்கள் கிரிஷ் குமார் மற்றும் மோகன் ஆகியோருக்கு மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணும், மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனும் சான்றிதழ் அளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர். அதேபோல, சரவணம்பட்டி போலீசாருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை ஒழிக்கும் நோக்கில் மாநகர போலீசார் பிரத்யேக அலைபேசி எண்ணை அறிவித்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது போல, மாவட்ட போலீசாரும் கஞ்சாவை ஒழிக்க பிரத்யேக எண் அறிவித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டால், கோவை மாவட்டத்தை கஞ்சா போதை இல்லாத மாவட்டமாக மாற்றலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...