கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழக சுற்றுலாத்துறை இணைந்து தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற 'தமிழ்நாடு டிராவல் மார்ட் 2019' ரோடு ஷோவை கோவை சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்தன் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு டிராவல் மார்ட் சங்கமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இரண்டாவது பதிப்பாக 'டி.டி.எம். மார்ட் 2019' என்ற கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்துகிறது. இதன் பிரச்சார (ரோடுஷோ ) மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை உதவ முன்வந்துள்ளது. இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற 'தமிழ்நாடு டிராவல் மார்ட் 2019' ரோடு ஷோவை கோவை சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்தன் துவக்கி வைத்தார்.

இதனிடையே, இந்த கண்காட்சி குறித்து தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது :- சென்னை வணிக மையத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வணிக ரீதியான சந்திப்புகள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஞாயிறன்று கண்காட்சியைப் பொதுமக்களும் காண அனுமதிக்கப்படுவர். முதல் மூன்று நாட்கள் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த கண்காட்சியின் இறுதியில், சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மண்டலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். கண்காட்சியுடன் இணையாக இந்திய தொழில் கூட்டமைப்பு, இதே வளாகத்தில் மருத்துவ மார்ட் ஒன்றையும் நடத்துகிறது. இதற்கான ஸ்டால்களை www.ciittm.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.
முதல்முறையாக 2017-ல் நடத்தப்பட்ட இந்த டி.டி.எம். மார்ட்-டில் 500 வெளிநாட்டு வணிகர்கள், உள்நாட்டு வணிகர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சியில் இவர்களுக்கு கலாச்சார கலை நிகழ்ச்சிகளுடன் விருந்தளிக்கப்பட்டது. தற்போது நடக்கும் ‘டி.டி.எம். 2019’ கண்காட்சியில் 1,000 வெளிநாட்டினரும், உள்நாட்டினரும் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இருந்து பயண திட்டங்களை வாங்குவோர் அதிக அளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மேம்பாட்டிற்கு இது உதவும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.