கோவை : பொள்ளாச்சி அருகே ஜமின்ஊத்துக்குளி பகுதியில் உரிமம் இல்லாமல் தரமற்ற முறையில் இயற்கை உரங்களை தயார் செய்து வந்த ஆலைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி அருகே உள்ள ஜமின்ஊத்துக்குளி பகுதியில் உரிமம் இல்லாமல் 'கிரீன் இண்டியா பயோடெக்' என்ற பெயரில் தரமற்ற முறையில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் (பொள்ளாச்சி) தலைமையில், வட்டாட்சியர் மற்றும் வேளாண்மைத் துறை பறக்கும்படை அலுவலர்கள் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முறையாக அனுமதி பெறாமல் இயற்கை உரங்கள் என்ற வணிக பெயரில் தரமற்ற உரங்களை தயார் செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ எடையுள்ள 184 மூட்டைகள் 'கிரீன் இண்டியா பயோடெக்' என்ற பெயரிலும், 10 கிலோ எடையுள்ள 10 மூட்டைகள் மைக்ரோ ஃபுட் என்ற நுண்ணூட்ட உரக் கலவை இருப்பு ஆகிய உர ரகங்களை பறிமுதல் செய்யப்பட்டு, தரமற்ற மற்றும் கலப்பட உரம் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேற்படி, உரங்களை பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டு உர ஆய்வு மையங்களுக்கு ஆய்வு அறிக்கை பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த உரங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்று முறையான உரிமம் பெறாமல் தரமற்ற உரங்கள் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் குறிப்பிட்டுள்ளார்.