பெற்றோர் குறித்த அவதூறான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை : தயாரிப்பாளருக்கு தொரட்டி பட கதநாயகி எச்சரிக்கை

கோவை : தயாரிப்பு தரப்பினரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாகவும், தனது பெற்றோர் குறித்த அவதூறுகளுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தொரட்டி படத்தின் கதாநாயகி சத்தியகலா தெரிவித்துள்ளார்.

கோவை : தயாரிப்பு தரப்பினரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாகவும், தனது பெற்றோர் குறித்த அவதூறுகளுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தொரட்டி படத்தின் கதாநாயகி சத்தியகலா தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் தொரட்டி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்றுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே, படத்தில் கதாநாயகியாக நடித்த சத்தியகலா என்பவர் மாயமாகிவிட்டதாகவும், அவரை அவரது பெற்றோரே கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி அவரை மீட்டுத்தரக்கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 



இந்த நிலையில், இது தொடர்பாக கதாநாயகி சத்திய கலா கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது ;- என்னை யாரும் கடத்தவில்லை. நான் எனது பெற்றோரோடு சொந்த ஊரான பொள்ளாச்சியில் பத்திரமாக இருக்கிறேன். தயாரிப்பு தரப்பினரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகினேன். ஆனால், தயாரிப்பு தரப்பு என் மீது அவதூறு பரப்பும் வகையிலும், படத்திற்கு எதிர்மறை விளம்பரம் தேடும் வகையில் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனக்கு பேசிய சம்பளமான ஒரு லட்சம் ரூபாயில், 50 ஆயிரம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைப்படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவர உள்ளதால், அது குறித்து தனக்கு வருத்தம் இல்லை, எனக் கூறினார்.

தயாரிப்பு தரப்பினர் பாலியல் ரீதியாக ஏதேனும் தொந்தரவு அளித்தனரா..? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- அது குறித்து தற்போது எதிர்மறையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தனது பெற்றோர் குறித்து அவதூறாக பேசியதற்காக தயாரிப்பு தரப்பினர் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தயாரிப்பு தரப்பினர் தன்னிடம் மூன்றாம் நபர் மூலமாக சமாதானம் பேச முயன்றதால், அதில் தங்களுக்கு உடன்பாடில்லை. இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன், எனக் கூறினார். 

இந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அவரது தந்தை ரத்தினம், தாயார் பாரதி, வழக்கறிஞர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...