கோவையைச் சேர்ந்த பறவை பெண் ஆராய்ச்சியாளருக்கு சென்னையில் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : கோவையைச் சேர்ந்த பறவை பெண் ஆராய்ச்சியாளரான கிருபாநந்தினிக்கு சென்னையைச் சேர்ந்த அமைப்பு சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

கோவை : கோவையைச் சேர்ந்த பறவை பெண் ஆராய்ச்சியாளரான கிருபாநந்தினிக்கு சென்னையைச் சேர்ந்த அமைப்பு சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. 



கோவையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வி. கிருபாநந்தினி (32), ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் சலீம் அலி இயற்கை வரலாறு மற்றும் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஜுனியர் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். பொள்ளாச்சியில் குடும்பத்தின் ஆதரவுடன் இளங்கலை படிப்பை முடித்த இவர், தனது சொந்த உழைப்பால் பறவைகள் பற்றி தற்போது பி.எச்.டி. பயின்று வருகிறார். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மைன்ட் நெக்ஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் கிராமப்புற பெண்கள் அறிவியல் தொழில்நுட்பங்களில் தங்களை எளிதில் ஈடுபடுத்திக் கொள்ளும் விதமாக, 'பெண்கள் அறிவியல் மன்றம்' தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பறவைகள் ஆராய்ச்சிக்காக, கிருபாநந்தினிக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 



பின்னர், நிகழ்ச்சியில் கிருபா நந்தினி பேசுகையில், "கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், போதுமான உதவிகள் இல்லாததால் அவர்களது கனவை அடைய முடியாமல் உள்ளனர். பெண்கள் அறிவியல் மன்றம் போன்ற அமைப்புகள் இது போன்ற பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகளாக உள்ளன," என்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைத் தவிர்த்து ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அதில், இரும்புப் பொருட்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை உண்டதனாலேயே பெரும்பாலான பறவைகள் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார். 

இந்த விருது பெற்றது குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் கிருபாநந்தினி பேசியதாவது :- நான் குழந்தையாக இருக்கும் போது, சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என எனது மாமா கூறினார். அவரது இந்த வார்த்தைகள் எனது வாழ்க்கைக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, பறவைகளின் பிரச்சனை பற்றி நான் பயில ஆரம்பித்தேன். பட்டம் விடும் நிகழ்ச்சி, பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் விஷம் வைத்தல் போன்ற செயல்களினால் பறவைகள் காலம் காலமாக உயிரிழந்து வருகின்றன. எனவே, இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஆழமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...