கோவை : கோவையில் வங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
கோவை : கோவையில் வங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கிய கூட்டு தொழில் நஷ்டமடைந்த நிலையில், வங்கிக் கடனில் தனது பங்கு தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், எனவே, தனது அடமானப் பத்திரங்களை மட்டும் விடுவிக்கும்படி பூபதி (எ) மகேஷ்வரன் என்ற விவசாயி வெரைட்டி ஹாலில் உள்ள இந்தியன் வங்கியில் முறையிட்டார். ஆனால், மொத்தத் தொகை செலுத்தினால் மட்டுமே பத்திரங்களை விடுவிக்க முடியும் என வங்கி மேலாளர் கூறினார். இதனால், மனமுடைந்த பூபதி, சுமார் 10 மணி அளவில் இந்தியன் வங்கியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சுமார் 11 மணியளவில் அவரது உடலை வங்கியில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு,மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சிலேயே உடல் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுமார் 3 மணியளவில் பூபதியின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பிரேத கிடங்கிற்கு அனுப்பினர். அங்கு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது பின்னர், 5.15 மணியளவில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக போலீசாரின் தீவிர முயற்சியினால் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, ஊடகங்களுக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிய நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.