கடன் பெற்று தொடங்கிய கூட்டுத் தொழில் தோல்வி : கோவையில் வங்கியிலேயே விவசாயி தற்கொலை

கோவை : நண்பர்களுடன் சேர்ந்து வங்கிக் கடன் பெற்று தொடங்கிய கூட்டுத் தொழில் தோல்வியடைந்த நிலையில், கோவையில் உள்ள வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : நண்பர்களுடன் சேர்ந்து வங்கிக் கடன் பெற்று தொடங்கிய கூட்டுத் தொழில் தோல்வியடைந்த நிலையில், கோவையில் உள்ள வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த பூபதி (61) மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து பால் பண்ணை வைப்பதற்காக கோவையில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். பால் பண்ணை தொழில் இலாபகரமாக இயங்காததால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பூபதி தனது பங்கை செலுத்துவதாகவும், தன்னுடைய அடமான சொத்துக்களை திருப்பி தருமாறு வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த வங்கியின் மேலாளர், கடன் பெற்ற அனைவரின் நிலுவைத் தொகையையும் நீங்கள் கட்டினால் மட்டுமே, சொத்து பத்திரங்களை விடுவிப்பதாகக் கூறியுள்ளார். 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பூபதி வங்கி வாசலிலேயே விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...