டெல்லி : புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

தென்னிந்தியாவின் முக்கிய புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. இது புலிகள் காப்பகமாக 2013 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 116 சிறுத்தைகள், 70 புலிகள், ஆயிரக்கணக்கான யானைகள், காட்டெருமைகள், அரிய வகை வெளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. புலி, சிறுத்தை, யானைகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2018-ம் ஆண்டு மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதாவது, புலிகள் பாதுகாப்பு, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற 10 தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற விழாவில், சிறந்த புலிகள் காப்பகத்துக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மண்டல காப்பாளர் நாகநாதனிடம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.