திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் குழந்தைகள் பிறந்தால் 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தினர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் ஊரகப் பகுதியைச் சேர்ந்த உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றைத் தயாரித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மருத்துவமனையில் மருத்துவம் நன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை அணுகும் முறை கடுமையாக உள்ளது. செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் பார்வையாளர்களை தரக்குறைவாக பேசுகின்றனர். குழந்தைகள் வார்டில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காயங்களுக்கு கட்டுபோடும் இடத்திலும், பணம் தர வேண்டிய நிலை உள்ளது. பிரசவ வார்டில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 500 வரை பணம் பெறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போதும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. இதையெல்லாம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.