வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வை தொடங்கியது கோவை மாநகராட்சி

கோவை : வெள்ளலூர் பகுதியில் ரூ. 178.26 கோடி செலவில் கட்டப்படும் பேருந்து நிலையப் பணிகளுக்கான செயலாக்க ஆய்வை கோவை மாநகராட்சி மேற்கொண்டது.

கோவை : வெள்ளலூர் பகுதியில் ரூ. 178.26 கோடி செலவில் கட்டப்படும் பேருந்து நிலையப் பணிகளுக்கான செயலாக்க ஆய்வை கோவை மாநகராட்சி மேற்கொண்டது. 

வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில் ரூ. 178.26 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11-ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான செயலாக்க ஆய்வு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் கூறியதாவது :- பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக மாநில நிதித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில், மாநகராட்சி மற்றும் மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். உள்ளாட்சி அமைப்பு செயலாக்க ஆய்வுப் பணிகளை தொடங்கி விட்டது. இன்னும் இரு வாரங்களுக்குள் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து விடும். கடந்த 2015-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு நகர இயக்கத் திட்டங்களை கோவை மாநகராட்சி வகுத்துவிட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

தற்போது இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான செயலாக்க ஆய்வுகளை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதோடு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.ஐ.டி.இ.எஸ்.உடன் சேர்ந்து இரு நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது," என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...