கோவையில் வரும் 2020-ம் ஆண்டு 3 நாட்கள் நடக்கும் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நடத்த ஏற்பாடு

கோவை : இ.இ.பி.சி. இந்தியா சார்பில் கோவையில் முதன் முறையாக சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.


கோவை : இ.இ.பி.சி. இந்தியா சார்பில் கோவையில் முதன் முறையாக சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ளது.



இ.இ.பி.சி. இந்தியா சார்பில் நம் நாட்டின் உயர்நிலை ஆராய்ச்சி, மேம்பாடு திறன், உற்பத்தி செயல்திறன்களின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களை எடுத்து காட்டும் விதமாக, கோவையில் சர்வதேச பொறியியல் ஆதார கண்காட்சி நடைபெற உள்ளது. 9-வது ஆண்டாகவும், கோவையில் முதன்முறையாகவும் நடைபெறும் இக்காண்காட்சி வரும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



இக்கண்காட்சி குறித்து இ.இ.பி.சி.யின் இந்திய தலைவர் ராகேஷ் ஷா பேசியதாவது :- உயர் தொழில்நுட்ப பொறியியல் ஏற்றுமதிகளுக்கு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, மிகவும் மேம்பட்ட மற்றும் நம்பத்தக்க கொள்முதல் மையமாக தமிழகம் உள்ளது. குறிப்பாக, மும்பை, பெங்களூர், புனே, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுக்கு அடுத்தபடியாக இந்த கண்காட்சி நடத்த கோவையை தேர்வு செய்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. ஜவுளித்துறை சிறு, குறு தொழில் மற்றும் மோட்டார் மற்றும் பம்ப்செட், கிரைண்டர் தயாரிப்பு, கிரைண்டர் தயாரிப்பு என கோவை நகரம் பல்வேறு தொழில் சார்ந்த விசயங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் கனரக தொழில்துறையின் ஆதரவோடு இ.இ.பி.சி. இந்தியா, இந்த கண்காட்சியைக் கோவையில் நடத்த உள்ளது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன, என்றார். 



இந்த சந்திப்பின் போது, இ.இ.பி.சி. இந்தியாவின் சுரஞ்சன் குப்தா மற்றும் ரூட்ஸ் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் சந்திரசேகர் உட்பட கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, எம்.எஸ்.எம்.இ. என கோவையின் பல்வேறு தொழில் துறை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...