நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே முக்கிய சாலையில் திடீரென புகுந்த காட்டு எருமைகளால் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் உள்ளிட்ட பலரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா சாலையைக் கடந்து கோத்தகிரி சாலை, ராணுவ சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலையில், காலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்கு அருகில் அதிக அளவில் இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென புகுந்த காட்டெருமை கூட்டம் இந்த சாலைகளில் அங்குமிங்கும் ஓட துவங்கியது. இதனால், சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் சுற்றுலாப் பயணிகள் என பலரும் அலறியடித்து ஓடினர். சிறிது நேரம் இந்த சாலையில் சுற்றி வந்த காட்டெருமைகள் பின்னர் அருகில் இருந்த சோலைகளுக்குள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.