கோவை : கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
கோவை : கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கின், ரித்திக். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஒரு தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிறுவன், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.