கோவை : தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்படுக்கையில் 33 சதவீதம் மர விவசாயம் கொண்டு வர வேண்டும் என்றும், அதுவே விவசாயிகளை தற்கொலை செய்துகொள்வதில் இருந்து காப்பாற்றும் வழி என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

காவிரி நதியானது 50 ஆண்டுகளுக்கு முன்பு ஓடியதை போல் செழிப்பாக ஓட வேண்டுமென்றால், அதன் கரையோரங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 73 கோடி மரக் கன்றுகள் நடும் களப்பணி கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் விரைவில் தொடங்க உள்ளது. தென்னிந்திய மக்களின் உயிர்நாடியாக திகழும் காவிரி நதியை மீட்டெடுப்பதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்னும் பெயரில் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சமீபத்தில் துவக்கியது. காவிரி நதியை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு, மட்டுமின்றி வேளாண் காடு வளர்ப்பு மூலம் சராசரி விவசாயிகளின் வருமானத்தை 5 முதல் 8 மடங்கு உயர்த்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து காவிரி நதி நீர்ப்படுகையில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகன பேரணி கோவையில் உள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணி துவக்க விழாவில், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி, நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் இருந்து புறப்படும் விழிப்புணர்வு வாகனங்கள் இம்மாதம் முழுவதும் காவிரி நதி நீர்ப்படுகையில் அமைந்துள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் 28 மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ளது. தாலுகா வாரியாக செல்லும் இவ்வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு வீடியோ மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், வார இறுதி நாட்களில் தாலுகா தலைமையகங்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு இரு வாகனங்கள் என் 5 பேர் வீதம் 56 வாகனங்கள், 140 பேர் ஈஷா களப் பணியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று வேளாண் காடு வளர்ப்பு குறித்தும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பலன்கள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது :- விவசாயிகள் 83 சதவீத மன வேதனையில் கடனில் உள்ளனர். உணவு கொடுப்பவர்கள் தற்கொலை செய்து கொண்டால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்பதற்காக 8 ஆண்டுகளில் வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின் முதல்படி இந்த பேரணியாகும். மர விவசாயத்தால் என்ன வகையான ஆதாயம் உள்ளது என்பது குறித்து விஞ்ஞான பூர்வமாக விளக்கும் வகையில், தமிழகத்தில் 4,000 கிராமங்களுக்கும் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 1,000 கிராமங்களுக்கு இந்த பேரணி வாகனம் பயணிக்க உள்ளது.
2ஆம் கட்டமாக செப்டம்பரில் ஒரு பேரணி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரையில் நடைபெறவுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் இடைவெளி இல்லாமல் செய்ய உள்ள இந்த திட்டம், ஒரு தனியார் அமைப்பு என்று பாராமல் அனைவரும் ஈடுபட ஊடகங்கள் உதவ வேண்டும். 242 கோடி மரங்கள் நடுவதற்கு 33 நர்சரி வைத்துள்ளது. அது போதாததால், 800 ஏக்கர் கர்நாடக மாநிலம் குடுகு மாவட்டத்தில் காபி எஸ்டேட்டில் பேசி வருகிறோம். 4,000 ஏக்கர் கன்று வளர்க்க நிலம் அளித்தால் நன்முறையில் இருக்கும். அது மட்டுமின்றி, மைசூரில் காவிரி அருகே 50 கி.மீ., இடைவெளியில் நர்சரி அமைக்க அரசு மற்றும் தனியாரிடம் நிலங்கள் பெற முயற்சித்து வருகிறோம். மரக்கன்றுகள் வளர்க்கும் தொழில் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். விதையில் மட்டுமின்றி நவீன தொழில்நுட்பத்தால் ஒரு இலையில் வளரும் வகையில் பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு உதவி செய்ய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விஞ்ஞானிகள் என பலர் உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு இரு மாநில அரசும் நேர்மையான ஆதரவை தெரிவித்துள்ளன. இதற்கு பெரிய நிதி தேவையில்லை என்பதால், மாநில அரசுக்கு பெரிய சுமை இல்லை. இந்த மாதத்தில் அதற்கான கொள்கை அறிவிப்பை அரசிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். சுற்றுச்சூழலுக்கு மகத்தான பொருளாதாரத்திற்கு உகந்த இந்த திட்டம். பழ வகைகள் உட்பட அனைத்து வகையான மரங்களும் வளர்க்க திட்டமிட்டுள்ளோம். தோராயமாக ஒரு ஏக்கரில் 30 வகையான மரங்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளோம். தண்ணீர் இல்லாததால் தான் இரு மாநிலங்களும் போராடுகிறோம். தற்போது தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் மோசமான நிலை ஏற்படும், என அவர் எச்சரித்தார்.