கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 69 மனுக்கள் அளிப்பு

கோவை : கோவை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 69 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை : கோவை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 69 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைத தீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 69 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.



இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குடிநீர் வரிவிதிப்பு புத்தகத்தை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார். இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் ரா.ரவி, சரவணன், அண்ணாத்துரை, செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், ஏ.ஜே.செந்தில்அரசன், மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் ஞானவேல், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...