மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ. 1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்

கோவை : மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

கோவை : மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் அமுதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான வங்கிக்கடன், மாதாந்திர உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 371 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இன்று பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உடனடி தீர்வாக 55 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பிரெய்லி கடிகாரம், கறுப்புக் கண்ணாடி, ஊன்றுகோல், கால் தாங்கிகள் போன்ற உதவி உபகரணங்களை ரூ. 1.35 லட்சம் மதிப்பீட்டில் அவர் வழங்கினார்.

அதாவது, 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,910 மதிப்பில் சக்கர நாற்காலிகள் மொத்தம் ரூ. 59,100 மதிப்பிலும், 16 பயனாளிகளுக்கு தலா ரூ.1,150 மதிப்பிலான ப்ரெய்லி கடிகாரம் மொத்தம் ரூ.18,400 மதிப்பிலும், 16 பயனாளிகளுக்கு தலா ரூ.150 மதிப்பிலான கருப்பு கண்ணாடி மொத்தம் ரூ.2,400 மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.6,475 மதிப்பிலான காதொலி கருவி மொத்தம் ரூ. 51,800 மதிப்பிலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 600 மதிப்பிலான 2 கால்தாங்கிகள் மொத்தம் ரூ.1,200 மதிப்பிலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 400 மதிப்பிலான 2 ஊன்றுகோல் மொத்தம் ரூ. 800 மதிப்பிலும், ஒரு பயனாளிக்கு நடைவண்டி ரூ. 1,750 மதிப்பில் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ. 1,35,450 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 35 பயனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டையும், 8 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...