நீலகிரி : நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் 'டீசர்வ்' ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டதில் பெரும்பாலான தேயிலைகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் இந்த ஆண்டிற்கான 30-வது ஏலத்தில் 'இலை ரகம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 902 கிலோவும், டஸ்ட் ரகம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 158 கிலோவும் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 50 கிலோ வந்தது. 29-வது ஏலத்தை விட 95 ஆயிரத்து 436 கிலோ அதிகரித்திருந்தது. அதில், இலை ரகம் 100 சதவீதம் விற்பனையானது. டஸ்ட் ரகம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 563 கிலோ விற்பனையானது. மேலும், இலை ரகத்தில் மொத்தமுள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை தூள்களும் 100 சதவீதம் விற்பனையாகின.

இலை ரகத்தில் குந்தா, சாலீஸ்பெரி, பந்தலூர் தொழிற்சாலைகளின் வரத்து அதிகமாக இருந்தது. டஸ்ட் ரகத்தில் சாலீஸ்பெரி தொழிற்சாலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 42 ஆயிரத்து 844 கிலோ வரத்து அதிகரித்து, இந்த தொழிற்சாலையின் மொத்த வருமானம் 32 லட்சத்து 53 ஆயிரத்து 881 ரூபாய் இருந்தது. ஏலத்தில் மொத்தம் 3 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 307 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு 71 ரூபாயாக இருந்தது. விலையில் ஒரு ரூபாய் 60 பைசா உயர்ந்தது. இந்த ஏலத்தில் விற்பனையும் அதிகரித்து, விலையிலும் உயர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.