கோவை : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தேர்வாகியுள்ள கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்களும், ரெங்கநாதபுரம் மாநகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவ, மாணவியர்களும், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும், ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் ஆக மொத்தம் 25 மாணவ, மாணவியர்களும், அவர்களுடன் 3 ஆசிரியர்களும் கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் இயங்கும் விதம், செயற்கைக் கோளின் பயன்பாடுகள் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி செல்ல இருக்கிறார்கள். முன்னதாக, அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், மாநகர கல்வி அலுவலர் கே. பழனி, அறம் பொதுநல அறக்கட்டளை நிர்வாகி லதா சுந்தரம், மாதவன், கார்த்திக், எச்.சி.எல். அறக்கட்டளை நிர்வாகி உதய் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.