கோவை : கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் கருத்து பதிவு விட்டதால், கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தனது முகநூலில் 'தில் இருந்தால் வா' என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் கடந்த 27-ம் தேதி நிர்மல் குமாரை கைது செய்தனர். இதில், நிர்மல் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டு நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிரியை வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்றும், புலன் விசாரணை பாதிக்கப்படும் என்றும் நீதிபதி ஞானசம்பந்தனிடம் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஞானசம்பந்தம், நிர்மல்குமார் தரப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.