கோவை : 900-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வசித்து வரும் சிங்காநல்லூர் குளத்தை பறவைகள் சரணாலமாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 63-ல் உள்ள சிங்காநல்லூர் குளக்கரையில் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலம், வானிலை நிலையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திறந்து வைத்தார். அப்போது, சிங்காநல்லூர் குளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சாதகமாக, குளத்தைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.
"சிங்காநல்லூர் குளத்தில் வாழும் பல்லுயிர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. குளத்தை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்," என்றார் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.
மேலும், நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்பில் அனைத்து குளங்களுக்கு முன்மாதிரியானதாக சிங்காநல்லூர் குளத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தில் 160 வகையான பறவைகளும், 453 வகையான தாவரங்களும், 100 வகையான பட்டாம்பூச்சிகளும், 22 வகையான பாலூட்டி விலங்குகளும், 28 வகையான ஊர்வனவும், நீர், நிலத்தில் வாழக்கூடிய 3 விலங்குகளும், 12 வகையான மீன்களும், 21 வகையான தும்பிகளும், 100-க்கும் மேற்பட்ட வகையிலான பூச்சிகளும், 20 வகையிலான எறும்புகளும் வாழ்ந்து வருகின்றன.
மேலும், குயிப் அமைப்பின் சார்பில் இயற்கை சூழல் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'நேட்சுரல் டிரெயல்' எனப்படும் இயற்கைச் சுற்றுலா சிங்காநல்லூர் குளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுவரை 6,100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தக் குளத்தில் வீடுகளில் பட்டாம்பூச்சி பூங்கா அமைப்பது குறித்த பயிற்சி பட்டறை நடைபெற இருக்கிறது.
"கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 7.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, 45 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது," எனக் கூறினார் கோவை ஆட்சியர்.