கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் எக்ஸிட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் எக்ஸிட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை ஹோப்காலேஸ் பகுதியில் உள்ள கோவை மருத்துவ கல்லூரியின் மாணவ, மாணவிகள் கருப்பு பட்டை அணிந்து, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும், கல்லூரி முன்பு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அப்போது, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் எக்ஸிட் தேர்வுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் உள்ள குறைகளை திருத்த வேண்டுமெனவும், மருத்துவ மாணவர்களுக்கு எக்ஸிட் தேர்வு தேவையற்றது எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.