திருப்பூரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

திருப்பூர் : திருப்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையிலுள்ள ஹவுசிங் யூனிட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மணி. இவர் இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டு மொட்டை மாடியில் துணிகளை காய வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் மணியை பின்தொடர்ந்து மொட்டை மாடிக்கு சென்று அவர் அணிந்துள்ள தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அதனை அவர் தடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர் மணியின் காதிலிருந்த கம்மல் மற்றும் மாட்டலையும் எடுக்க முயன்று அவரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்டு மாடிக்கு வந்த மணியின் கணவர் பாலசுப்ரமணியத்தையும் தாக்கிவிட்டு, அந்த மர்ம நபர் மாடியிலிருந்து குதித்துள்ளார். 



இதனால், ஏற்பட்ட காயத்தால் அந்த நபரால் ஓட முடியவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபரை சுற்றி வளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், மர்மநபரை ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மர்மநபர் தாக்கியதில், உதடு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்ட மணி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...