கோவை : சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட பாரதி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சாய்பாபா காலனி காவல் எல்லைக்குட்பட்ட பாரதி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2-வது வீதியைச் சேர்ந்த பிரேம்குமார் எல்.ஐ.சி. ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் சந்தன மரம் ஒன்றை வளர்த்து வந்தார். சுமார் 30 அடி உயரத்திற்கு வளர்ந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதை இன்று காலை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பிரேம்குமார் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் அதிகரித்து வரும் சந்தன மரக்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இருவரை போலீசார் நேற்று கைது செய்து இருந்த நிலையில், மீண்டும் காவல்துறையினருக்கு சவால் விடும் விதமாக அதே பகுதியில் சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.