உடுமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கோவை விமான நிலையத்தில் மீட்பு : பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் வீட்டை விட்டு வெளியேறியதாகக் குற்றச்சாட்டு

கோவை : பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் அதிருப்தியடைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பள்ளிச்சீருடையில் கோவை விமான நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

கோவை : பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் அதிருப்தியடைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பள்ளிச்சீருடையில் கோவை விமான நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டனர். 

சமீப காலமாகவே பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தங்களது பெற்றோர்களை விட்டு வெளியூர்களுக்கு செல்லும் தகவல்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகிறது. இவ்வாறு பெற்றோரின் துணையின்றி தனியாக செல்லும் சில குழந்தைகள் சமூக விரோதிகளின் கையிலும் மாட்டிக் கொள்கின்றனர். அதேபோல, இன்னும் சில குழந்தைகள் சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பார்வையில் பட்டு மீண்டும் அவரவர் பெற்றோர்களிடம் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், பெற்றோர்களின் மீது உள்ள கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகள் இருவர் கோவை விமான நிலையத்தில் மீட்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ஷர்நிதா மற்றும் ஹர்ஷிதா. இவர்கள் இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இதில், இரண்டு சிறுமிகளும் நேற்று பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லாமல் அங்கிருந்து பேருந்தில் ஏறி பொள்ளாச்சி வந்துள்ளனர். பின்னர் பொள்ளாச்சியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர்.

அப்போது, பள்ளி சீருடையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுமிகளை போலீசார் விசாரணை செய்ததில், இருவரும் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், தங்களது பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் மனம் உடைந்து வேறு எங்காவது சென்று விடுவோம் என்று இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விமான நிலைய போலீசாரும், பீளமேடு போலீசாரும் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களது பெற்றோரை வரவழைத்தனர். பின்னர், வந்த பெற்றோர்கள் சிறுமிகளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...