கோவையில் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு குழு : 24 மணிநேரம் செயல்படும் தனிப்பிரிவு தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணிநேர தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணிநேர தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியில் வைக்கப்படுகிறது. இதில், மேற்கு மண்டலமான உடுமலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஆணவப் படுகொலை நடைபெற்றது. இந்த ஆணவ படுகொலையையடுத்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், ஆணவ படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இதற்கான தனிப்பிரிவுகள் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட சமூக நல அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கலப்பு திருமணம் செய்தவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவது தொடர்பாக 24 மணி நேரமும் புகார்கள் கொடுக்கலாம். மேலும், புகார் தெரிவிக்க 0422-2200777,94981 01165, 94981 81212 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...