காரமடை அருகே தகாத உறவு பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை : காரமடை அருகே தகாத உறவு விவகாரத்தில் பெண்ணின் கையை அறிவால் வெட்டிய நபரை கைது செய்த போலீசார், குற்றவாளியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை : காரமடை அருகே தகாத உறவு விவகாரத்தில் பெண்ணின் கையை அறிவால் வெட்டிய நபரை கைது செய்த போலீசார், குற்றவாளியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே சின்ன தொட்டிப்பாளையம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுக்கும், காரமடை பில்லுக்கடையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தங்கராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. கணவன் இறந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்று வந்த தங்கராஜூக்கும், சுஜாதாவுக்கும் கடந்த இரண்டு ஆண்டாக பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சுஜாதா மற்ற சில ஆண்களுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் தொட்டிபாளையத்தில் உள்ள சுஜாதாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சுஜாதா தங்கராஜிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த தங்கராஜை சுஜாதா கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், தனக்கு பணம் கொடுக்க வேறு ஆண்கள் உள்ளதாக கூறி, வீட்டை விட்டு செல்லுமாறு சொல்லி தகராறு செய்துள்ளார்.

அப்போது, தங்கராஜ் சுஜாதவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதனை சுஜாதா கை வைத்து தடுத்த நிலையில், அவரது இடது கை துண்டானது. பின்னர், தங்கராஜ் தலைமறைவாகினார். இதனை தொடர்ந்து, கை வெட்டுபட்ட சுஜாதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், காரமடை பகுதியில் பதுங்கியிருந்த தங்கராஜ் போலீசாரால் நேற்று மாலை கைது செய்யபட்டார். அவர் மீது கொலை முயற்சி, பெண்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார், தங்கராஜை கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கை துண்டான சுஜாதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...