கோவையில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை

கோவை : கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பல குறைபாடுகள் வரப்பெறுகின்றன. அவை தொடர்பான உரிய நடவடிக்கை எடுத்திட போக்குவரத்துத் துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

ஆய்வின்போது, அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் இயக்குவது, வழித்தடத்தில் முழுமையாக இயக்காதது, கால அட்டவணையை பின்பற்றாதது, கூடுதல் நடத்துநரை அமர்த்துவது, அனுமதிக்கப்படாத இடத்தில் பேருந்துகளை நிறுத்துவது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனங்கள் நில்லாமல் செல்லுதல், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வண்ண விளக்குகள் பொருத்துவது, அதிக வேகமாக இயக்குவது மற்றும் காற்று ஒலிப்பான் பொருத்தி இயக்குவது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைபாடுகள் இன்றி போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்கள் இன்றி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிட வேண்டும். இதுபோன்ற புகார்கள் இல்லை என்பதை உறுதிபடுத்திட ஏதுவாக மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுடனான கூட்ட ஆய்வு மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...