சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள முக்கிய செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த காட்சிகள் செய்திகளாக ஒளிபரப்பப்பட்டன.

மேலும், முதல்முறையாக சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியின் மூத்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
"இந்த வீடியோ காட்சிகள் நீண்ட நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட கபினி வனப்பகுதியில் எடுக்கப்பட்ட ஆனால், சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள் என வதந்தி பரப்புகின்றனர்," என்றனர் அதிகாரிகள்.