திருப்பூர் : திருப்பூர் அருகே உள்ள சுடுகாட்டில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் முத்தண்ணம்பாளையத்தை அடுத்துள்ளது மகாலட்சுமி நகர். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் கலியமூர்த்தி (48). பாண்டிச்சேரியை அடுத்த நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த கலியமூர்த்திக்கு, அருணாச்சலம் (18) என்கிற மகனும், 16 வயது மகளும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி புவனேஸ்வரியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து முன்னர் திருப்பூரில் கலியமூர்த்தி குடியேறியுள்ளார். மேலும், அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று வேலை இல்லாததால் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கலியமூர்த்தி வீடு திரும்பவில்லை. இதனிடையே, ரத்த வெள்ளத்தில் கலியமூர்த்தி மயான பூமி அருகே உள்ள சுடுகாட்டில் இறந்து கிடப்பதாக திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு சரக துணை ஆணையர் நவீன் குமார் மற்றும் ஊரக காவல்துறை ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கலியமூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உடல் கிடந்த இடத்திற்கு மோப்பநாய் ஹண்ட்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கலியமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் யாரேனும் ஈடுபட்டு கைகலப்பாக மாறி கொலை செய்யப்பட்டாரா..? அல்லது பெண் விவகாரம் காரணமாக கொலை நடந்ததா..? என்கிற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.