நீலகிரி : உதகை அருகே உள்ள செலக்கல் கிராமத்தில் இந்து கோயில்கள் உள்ள இடத்தில் இஸ்லாமியர்களுக்கு மயான பூமி அமைக்க இடம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் செலக்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன், ஹெத்தை அம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில்களின் அருகே இஸ்லாமியர்களுக்கான மயான பூமி அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் எனவும், இல்லையெனில், தங்களது ஆதார், பட்டா உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.