மார்ட்டின் நிறுவன காசாளர் மர்ம மரணம் விவகாரம் : முதற்கட்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், முதற்கட்ட மருத்துவ அறிக்கை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், முதற்கட்ட மருத்துவ அறிக்கை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்த காசாளர் பழனிச்சாமி கடந்த மே மாதம் 3-ம் தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பழனிசாமியின் மகன் நீதிமன்றத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், பழனிச்சாமியின் உடலை மருத்துவக் குழுவினர் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர், பழனிச்சாமி உயிரிழந்ததற்கான காரணம் கொலையா..?, தற்கொலையா..? என்பதை கண்டுபிடிக்க அவரது உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், பழனிச்சாமி குடும்பத்தினர் தரப்பின் சார்பில் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் சம்பத்குமார் இன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் நீதிபதி ராமதாசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நீரில் மூழ்கி இறந்து உள்ளாரா..? என்பதை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் 'டயட்டம் சோதனையில்' தண்ணீர் புகுந்த பாசி பொருட்கள் இருந்ததாக தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல. மூச்சுத் திணறி இறந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில். மீதமுள்ள இரண்டு மருத்துவர்களின் அறிக்கைகள் வந்தவுடன் தான் கொலையா..? தற்கொலையா..? என்பது தெரியவரும்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...