மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு காந்தி மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறைகள் வெளியீடு

திருப்பூர் : மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு திருப்பூரில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.


திருப்பூர் : மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு திருப்பூரில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. 



1869-ம் ஆண்டு பிறந்த மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக, மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட 11 இடங்களை தேர்வு செய்து சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்படுகிறது. அதில், தமிழக மேற்கு மண்டல தபால் துறையின் சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. 



இதனை தியாகி திருப்பூர் குமரனின் கொள்ளுப்பேரன் சதானந்தம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் முதலாவதாக வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் நான்கு தபால் தலைகள் மற்றும் மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...