திருப்பூர் : கடந்த ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினியை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் : கடந்த ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினியை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 2017-18, 18-19-ம் ஆண்டு மேல்நிலை வகுப்புகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படித்த மாணவ, மாணவியருக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியும், தங்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.