கோவையில் ரியல் எஸ்டேட் நடத்தி மோசடி : தமிழக வியாபாரிகள் சங்க தலைவர் கைது

கோவை : காந்திபுரம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், அந்நிறுவன உரிமையாளரும், தமிழக வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான பரமசிவம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : காந்திபுரம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், அந்நிறுவன உரிமையாளரும், தமிழக வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான பரமசிவம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பரமசிவம். இவர், கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நெல்லை முத்துவிலாஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் முத்து சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பரமசிவம் நடத்தி வரும் நிறுவனத்தில் நிலம் வாங்குவதற்காக தவணை முறையில் ஏராளமானோர் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால், வாடிக்கையாளர்கள் முழுமையாக பணம் செலுத்திய நிலையில், நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும், சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 20-ம் தேதி கோவை மாநகர காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் பரமசிவத்தை தேடி வந்தனர். இந்த நிலையில், காந்திபுரம் அருகே உள்ள ஒரு விடுதி அறையில் தலைமறைவாக இருந்த போது, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை கோவை பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, அந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் ரசீதுகளுடன் வந்து புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...