இணையதளத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் தொலைபேசி எண்ணை வைத்து மோசடி : இளைஞர் கைது

திருப்பூர் : இணையத்தில் மாநகர காவல் ஆணையரின் எண்ணை பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : இணையத்தில் மாநகர காவல் ஆணையரின் எண்ணை பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் தனது ஊரில் இருந்தவாரே சொந்த விஷயமாக திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு நேரடியாக புகார் ஒன்றை அளிக்க முயன்றார். இதற்காக, இணையதளத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் எண்ணைத் தேடிய போது, காவல் ஆணையர் திருப்பூர் என்ற பெயரில் ஒரு அலைபேசி எண்ணை எடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பேசியவர் தன்னை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் என்றே தெரிவித்து வினோத்குமாரின் புகாரைக் கேட்டுக் கொண்டார். 

பின்னர், இது தொடர்பாக விசாரிப்பதாகக் கூறிய அந்த நபர், இதற்காக வாகனங்களுக்கான எரிபொருள் செலவு எனக் கூறி ரூ. 4 ஆயிரத்தை தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். அப்போது, தன்னிடமிருந்த ரூ. 3,500 பணத்தை வினோத்குமார் அந்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய பிறகு அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த வினோத்குமார் காவல் துறையை சேர்ந்தவர்களிடம் விசாரித்து பார்த்த போது அவர் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. பிறகு, திருப்பூர் மாநகர காவல்துறை எண்ணைப் பெற்று மோசடி குறித்து வினோத்குமார் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை வைத்து விசாரனை மேற்கொண்டனர். இதில், திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (20) என்ற இளைஞர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இப்ராகிமை கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இணையத்தில் தனது செல்போன் எண்ணை காவல் ஆணையர் எண் போல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றி வினோத்குமார் போல பலரை ஏமாற்றியிருப்பதும் அம்பலமாகியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...