நீலகிரி : மருத்துவமனை தினத்தை முன்னிட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறந்த மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் மருத்துவக் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், முன்னிலை உள்தங்கு மருத்துவர் ஜெய் கணேஷ் மூர்த்தி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பாளர் அலுவலக பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், உதகை மருத்துவமனை தினமும் கொண்டாடப்பட்டது. இதில், ஆம்புலன்ஸ் உதவி பேரிடர் காலங்களில் உதவி செய்யும் சமூகநல அமைப்பினருக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.