கோவை : தாய்பால் தானம் குறித்து தவறான கருத்துகள் நிலவுவதே அது கிடைக்க தடையாக உள்ளதாக உயிர் துளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்பால் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் பால் வாரம் தொடர்பாக கோவை பேரண்டிங் நெட்வொர்க் தனியார் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர்கள் மினு மற்றும் குமுதா ஆகியோர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- தாய்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதியில் சரவணம்பட்டியில் உள்ள பிரோசோன் மாலில் ஜயண்ட் வீல் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணம் பொது சேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
மேலும், தாய்பால் குறித்த அச்சமில்லை என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றம் 7 நாட்களுக்கு செய்யப்படும். இது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாய்பால் தானம் அதிகரித்து உள்ளது. அவ்வாறு பெறப்படும் தாய் பால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும். மேலும், ஜயண்ட் கண்காட்சியின் போது குழந்தைகளை அரவணைத்தபடியே தாய்மார்கள் நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.
தாய் பால் தானம் குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலான கல்லூரிகள் சம்மதம் தெரிவித்து உள்ளன, எனத் தெரிவித்தனர்.