கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா கொண்டாட்டம் : அரசின் வசதிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற ஆட்சியர் அறிவுரை

கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விரிவுரை கூட்டரங்கில் மருத்துவமனை தினம்-2019 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விரிவுரை கூட்டரங்கில் மருத்துவமனை தினம்-2019 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 



நம் நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 30-ஐ மருத்துவமனை தினமாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மருத்துவமனையின் சாதனைகளை பறைசாற்றவும், மருத்துவமனைக்கு உதவும் கொடையாளர்களைக் கௌரவப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்துள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் முதல்வர் டாக்டர் அசோகன், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஷ்வரன் குமார் ஜடாவத், சர்வதேச விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சௌந்திரவேல் மற்றும் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர். 



இந்த விழாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் பேசியதாவது :- கோவை அரசு மருத்துவமனை 110 ஆண்டுகளாக மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. உள்கட்டமைப்பு என பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது, எனக் கூறினார். 



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி கூறியதாவது :- மருத்துவமனை தினம் என்பது நம்மை நாம் சுய ஆய்வு செய்துகொள்ள உதவுகிறது. சரியான நேரத்தில் சரியான, தரமான சிகிச்சை உயிரைக் காப்பாற்றும். ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நாடக்கூடியவர்கள். மருத்துவர்களைக் கடவுளாக பார்க்கக்கூடியவர்கள், அவர்களுக்கான சேவையை மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். அதேபோல, அரசு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு சிறப்பான பணிகளை வழங்க வேண்டும், என மருத்துவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...