நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி பலி உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா மேங்கோ ரேஞ்ச் தனியார் தோட்ட தொழிலாளர் கருப்பையா (45). இவர் இன்று தொழிலாளர் குடியிருப்பில் இருந்து கழிப்பறை செல்வதற்காக வெளியே வந்த இவரை மறைவாக நின்றிருந்த காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் வசிப்பவர்கள் சத்தமிட்டு யானையை விரட்டி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

இதேபோல, தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லி குன்னு கிராமத்தில், நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய ஜெயா (45) மற்றும் கண்ணன் (28) ஆகியோர் காட்டு யானை விரட்டியதில் படுகாயமடைந்தனர். இதில், ஜெயா தலையில் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் காயமடைந்த கண்ணன் லேசான காயத்துடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தற்போது மழைக்காலம் என்பதால் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.