கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் சுயம்புவாக அருள்பாலிக்கும் வன பத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

குண்டம் திருவிழா நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து, பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் 3 அடி உயரத்திற்கு பக்தர்கள் குண்டம் இறங்க பித்யேகமாக ஊஞ்ச மரக்கிளைகொண்டு தீ முட்டி குண்டம் தயார் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு கோவில் தலைமை பூசாரி பால், தயிர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமை பூசாரி தண்டபானி முதலில் குண்டம் இறங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். பின்னர், பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக தீ குண்டம் இறங்கி அம்மனிடம் தங்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்.பி. தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.