மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நிதியுதவி வழங்காமல் காலம் தாழ்த்துவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

திருப்பூர் : பல ஆண்டுகளாக கை, கால்கள் செயல் இழந்து தவிக்கும் தனது மாற்றுத்திறனாளி மகனின் பராமரிப்பு செலவுக்கு உதவி செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் : பல ஆண்டுகளாக கை, கால்கள் செயல் இழந்து தவிக்கும் தனது மாற்றுத்திறனாளி மகனின் பராமரிப்பு செலவுக்கு உதவி செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார். 



திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து. இவரது மகன் சஞ்சய் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே திடீரென்று ஏற்பட்ட மஸ்குலர் டிசீஸ் காரணமாக கை, கால்கள் செயல் இழப்பிற்கு ஆளாகினார். இதனிடையே, மகனது பள்ளி படிப்பை அதோடு நிறுத்திவிட்ட நிலையில், மகனை வீட்டிலேயே வைத்து காளிமுத்து கடந்த 4 ஆண்டுகளாக கவனித்து வந்துள்ளார். இதனிடையே, மாற்றுத்திறனாளிக்கான நிதி உதவியை தனது மகனுக்கு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காளிமுத்து குற்றம்சாட்டுகின்றார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தனது மகனை தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், தனது மகனுக்கு பராமரிப்பு செலவு வழங்கக் கோரி மனு அளித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...