நீலகிரி : குன்னூர் ராணுவ கல்லூரி அருகே 2 சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ முகாமில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில், ராணுவ முகாமில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வரும் கல்லூரி அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை பரிசோதனை செய்த போது, அதில் கல்லூரி அருகேயுள்ள சாலையில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக இரவில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதனை ஆய்வு செய்த ராணுவ கல்லூரி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. அதன் பேரில், ராணுவ கல்லூரி வளாகத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.