நீலகிரி : உதகை அருகே பில்லிக்கொம்பை மற்றும் கட்டபெட்டு கிராமங்களில் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபானக் கடை உள்ளதால் பெண்கள் மட்டும் அல்லாமல், குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் பல இன்னல்களுக்கு ஆளாவதாக கிராம மக்கள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். மேலும், பிரதான சாலையில் மதுபானக் கடை உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பெண்களும் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை மேடாகக் காட்சி அளித்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குடிமகன்கள் சாலையிலேயே படுத்துக் கொள்வதாலும், பாட்டில்களை சாலையிலேயே உடைத்து செல்வதாலும், பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், கிராம மக்களுக்கு எந்த இடையூறும் குடிமகன்களால் இல்லாதவாறு மாவட்ட ஆட்சியர் உடனடியாக இங்கிருந்து மாற்று இடத்திற்கு மதுபான கடையை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.