திருப்பூர் : திருப்பூரில் தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டில், 3 வயது குழந்தையை பள்ளி கல்விக்குள் கொண்டு வந்து மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதை ஏற்க முடியாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
திருப்பூர் : திருப்பூரில் தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டில், 3 வயது குழந்தையை பள்ளி கல்விக்குள் கொண்டு வந்து மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதை ஏற்க முடியாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருப்பூரில் தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை எதிர்ப்பு மாநாடு திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கே,ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில், கல்வியாளர் பிரின்ஸ், கஜேந்திரபாபு, வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 3-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு என்பதனையும், மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, 5 முதல் 10 மைல் தூரத்திற்குள் உள்ள பள்ளிகளை இணைப்பதும், ஆசியர்களோடு சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை பாடம் கற்பிக்க அனுமதிப்பது ஆசிரியர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, அரசியல் தலையீட்டை அதிகரிக்கவும் செய்வதால் அதனை எதிர்ப்பதாகவும், 200 அந்நிய நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதித்து கல்வியை கார்ப்பரேட்மயமாக்க முயலும் கொள்கையை எதிர்க்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்த மாநாட்டில் மாணவர் சங்கங்கள், திராவிடர் கழக இயக்கங்கள், கல்வியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.