நீலகிரி : உலக சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழகத்தில் 264 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, முதுமலை, பந்திப்பூர், வயநாடு, சத்தியமங்கலம், வனப் பகுதிகளில் இன்று புலிகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வன அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பேசும்போது, முதுமலை, பந்திப்பூர், வயநாடு, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தில் உள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் 264 புலிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரியில் வனவிலங்கு உயிரினம் பயிலும் மாணவர்களுக்கான புலிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்தக் கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வனவிலங்கு உயிர் ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, வனத்தில் உள்ள புலிகளுக்கான வழித்தடங்கள் இணைப்பிருந்தால் மட்டுமே இனவிருத்தி அதிகரிப்பதோடு, வனங்களின் செழிப்பும் அதிகமாகும் என கருத்தரங்கில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.