தொண்டை அடைப்பான் நோயை எதிர்கொள்ள தயார்நிலையில் தடுப்பு மருந்துகள் : நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்

கோவை : மலை மாவட்டமான நீலகிரியில் தொண்டை அடைப்பான் டிப்தீரியா நோயை எதிர்கொள்ள 80 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயாராகவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்தார்.

கோவை : மலை மாவட்டமான நீலகிரியில் தொண்டை அடைப்பான் டிப்தீரியா நோயை எதிர்கொள்ள 80 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயாராகவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்தார். 

மலை கிராமங்களில் மட்டுமே அதிகம் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதுவரை இந்த நோய் நீலகிரியில் யாரையும் தாக்கவில்லை. இந்த நோய் குறிப்பாக, 7 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கே அதிகம் வரக்கூடியது. முதலில் காய்ச்சல் தொண்டை வலியால் அவதிப்படுவர். இவர்களை கண்டறிய சிறப்பு சிகிச்சை முகாமினை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 



"சில தனியார் பள்ளிகள் தாங்களாகவே தனியாரிடம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதாக கூறினாலும், தடுப்பு எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களை மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நோய்க்கான தடுப்பூசி மலைக் கிராமங்களில் மாணவர்கள் போடுவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தடுப்பூசி போடாத காரணத்தால் பிற மாணவர்களுக்கும் எளிதாகப் பரவுகிறது. மேலும், வேகமாகப் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோய் நீலகிரிக்குள் வந்து விடாமல் இருக்க மாவட்ட எல்லைகளான கூடலூர், பர்லியார், குஞ்சப்பண்னை போன்ற நுழைவு வாயில்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்," மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...